அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது ஆன்றோரின் அருள் வாக்கு. அந்த வகையில் அன்று பாம்பன் சுவாமிகள் மந்திரச் சொற்கள்கொண்ட சண்முகக் கவசம் படைத்தார், 100 வருடங்களில் உலக அளவில் பரவும் என்றார்.

எப்படி இந்த மந்திரச் சொற்கள் மேற்கத்திய இசைப்பாணியில் இந்த நூறாவது ஆண்டில் உருவெடுத்தது? இந்த தெய்வீக இசையைக் கேட்கும் பாக்கியத்திற்கான வாய்ப்பை நான் எப்படி பெற்றேன்? எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளுக்குத்தான் தெரியும்.

இதுவரை எந்த இந்திய மொழியிலும் மேற்கத்திய இசை நுணுக்கத்தில் பக்கவாத்தியமே இல்லாத சேர்ந்திசையில் (choral A–Cappella) பாடல்கள் உருவாக்கப் படவில்லை. முதன் முதலில் அந்தத் தெய்வீக இசையைத் தமிழில் கேட்டபோது என்னை மறந்த உணர்ச்சியற்ற நிலைதான் ஏற்பட்டது. கண்கள் பனித்தன. உடல் சிலிர்த்தது. பல குரல்களும் இறைவனின் இதயத்தின் ஒரே குரலாக ஓம் என்ற பிரணவ மந்திரமாக ஒலித்தது, பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்த இசையை அமைத்து, ஸ்வரப்படுத்தி, நூல் வடிவில்கொண்டு வந்த பெருமை இசைமேதை திரு கணேஷ் பா. குமார் அவர்களையே சாரும். இதற்குப் புரவலராக விளங்குபவர்கள் திரு.கணேஷ் அவர்களின் தந்தை திரு.க.பாலகிருஷ்ணன், திரு. ஆனந்து மாதவனும் ஆவார்கள். திட்ட முன்னணியாக விளங்குபவர் Dr.R.பிரேம் வெங்கடேஷ் ஆவார். இலக்கண வடிவில் செம்மைப் படுத்தும் பெரும் பங்கினை வகித்தவர் திரு.வீ.முத்துக்குமார குருசாமி என்கின்ற சற்குரு ஆவார். ஒருங்கிணைப்பாளாராகத் விளங்குபவர்கள் திரு.திவாகர், திருமதி ஜார்ஜினா சிங் ஆவார்கள். மொத்தத்தில் இவர்களையெல்லாம் இறைவன் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. அவர்களை மனதாரப் பாராட்டி மகிழ்வோம்.


Kontaktiere uns

Für Spenden / Sponsoring

 
Ganesh B.Kumar
+91 44 45513960
ganeshaestheticmusic@yahoo.com
ganesh.composer@gmail.com
+91 98400 60691